Sorting by

×

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுகள் 20-05-2024 முதல் 25-05-2024 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை அறிவிப்பினை தொடர்ந்து, இத்தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *