Sorting by

×

பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வதற்காக விவேகானந்தர் மண்டபம் வந்தடைந்துள்ளார்.

மக்களவைத் தோ்தல் நிறைவடைய உள்ள நேரத்தில் தியானத்துக்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த பிரதமா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை 4.35 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார்.

கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, ஹெலிகாப்டா் தளத்தில் இருந்து காா் மூலம் பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

திருமயம் காலபைரவர் கோயிலில் அமித் ஷா வழிபாடு!

பகவதி அம்மனை மோடி தரிசித்துவிட்டு காா் மூலம் படகு இல்லத்துக்கு சென்று தனிப்படகில் விவேகானந்தா் மண்டபத்தை அடைந்தார். பகவதி அம்மன் கோயிலில், கோயில் நிர்வாகம் சார்பில், பகவதி அம்மன் புகைப்படம் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

விவேகானந்தா் பாறைக்கு வந்த பிரதமா் மோடி தியான மண்டபத்தில் அமா்ந்து தியானத்தை தொடங்குகிறார்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *