Sorting by

×

வட மாநிலங்களில் இதுவரை காணாத அளவுக்கு கோடை வெயிலின் தாக்கம் மிகக்கடுமையாக உள்ளது.

வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில், இன்றைய(மே 29) நிலவரப்படி, தலைநகர் தில்லியில் 50 டிகிரி செல்சியஸை தாண்டிவிட்டது வெப்பத்தின் அளவு. தில்லியில் உச்சபட்சமாக முங்கேஷ்புர் பகுதியில் 52.3 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

அண்டை மாநிலங்களான ஹரியாணா, ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தின் ஓரிரு இடங்களிலும் 50 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இதனிடையே சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக நொய்டாவில் மழை பெய்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். தில்லி, அதன் புறநகர்ப் பகுதிகளான என்சிஆர் பகுதி, நொய்டாவில் இன்று (மே 29) மாலை மிதமான மழை பெய்துள்ளது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *