Sorting by

×

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில், மாவட்டத் தலைநகரை உள்ளடக்கிய ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வாக தி.மு.க மாவட்டச் செயலாளரும், கைத்தறித்துறை அமைச்சருமான ஆர்.காந்தி இருக்கிறார்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, காந்தியை எதிர்த்து அ.தி.மு.க சார்பாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.எம்.சுகுமார் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் கணிசமாக வாழும் இஸ்லாமியர்களின் வாக்குகள் போதுமான அளவு அ.தி.மு.க-வுக்குக் கைகொடுக்காததால், காந்தியிடம் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் எஸ்.எம்.சுகுமார்.

எஸ்.எம்.சுகுமார்

இந்த நிலையில், வரும் தேர்தலிலும் போட்டியிடத் தயாரான அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சுகுமாருக்கு ராணிப்பேட்டையை விட பக்கத்திலுள்ள ஆற்காடு தொகுதி மீதே பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால், ஆற்காடு தொகுதிக்கும் சேர்த்தே அ.தி.மு.க தலைமையில் விருப்ப மனு கட்டி வந்திருக்கிறார் சுகுமார். இதனிடையே, கடந்த முறைபோல அ.தி.மு.க கூட்டணியில் இணைந்திருக்கும் பா.ம.க-வும், மீண்டும் ஆற்காடு தொகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

பாட்டாளிகளின் எதிர்பார்ப்பை தகர்த்தெறியும் வகையில், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் ஆற்காடு தொகுதியில் பெரிய பட்ஜெட்டுடன் களமிறங்கி தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டாராம். பாட்டாளிகளின் குமுறல் சத்தத்தை காதில் வாங்கிக்கொள்ளாத எஸ்.எம்.சுகுமார் தரப்பினர் ஆற்காடு தொகுதி முழுவதும் வீடு, வீடாகச் சென்று ரேஷன் கார்டுக்கு வேட்டி, சட்டை, புடவை, ஜாக்கெட் துணி ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்களாம்.

தேர்தல்
தேர்தல்

அதுமட்டுமல்லாமல், தொகுதியைச் சார்ந்த அ.தி.மு.க-வின் கிளைச் செயலாளர், வட்டச் செயலாளர் போன்ற நிர்வாகிகளுக்கும் தலா ஒரு சிப்பம் அரிசி மூட்டையை கொடுத்துள்ளார்களாம். எல்லாவற்றையும்விட முக்கியமானதாக, தொகுதியிலுள்ள 318 பூத்களிலும் தலா 3 பூத்களுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து, வாக்காளர்களைக் கவனிக்கவும் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுவிட்டதாம்.

ஆற்காடு தொகுதியில் மொத்தமாக 2,43,565 வாக்காளர்கள் இருக்கின்றனர். அதைக் கணக்கிட்டு, வாக்காளர்களை `வெய்ட்டாக’ கவனிக்க அ.தி.மு.க தரப்பு திட்டமிட்டிருக்கிறதாம்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *