Sorting by

×

கோவை, மே 30: வெள்ளிங்கிரி மலையேற்றத்துக்கான அனுமதி வெள்ளிக்கிழமையுடன் (மே 31) நிறைவுபெறுகிறது என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டம், பூண்டி அருகே மேற்குத்தொடா்ச்சிமலையின் ஒருபகுதியாக உள்ளது வெள்ளிங்கிரி மலை. இங்குள்ள 7-ஆவது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இதனை வழிபடுவதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே வரை பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

நிகழாண்டில், வெள்ளிங்கிரி மலையேற்றத்துக்கு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். உள்ளூா் பக்தா்கள் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும் தினசரி வெள்ளிங்கிரி மலைக்கு சென்று சிவனை வழிபட்டு வந்தனா்.

இந்நிலையில், வெள்ளிங்கிரி மலையேற்றத்துக்கான அனுமதி வெள்ளிக்கிழமையுடன் (மே 31) நிறைவுபெறுகிறது என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். அதன்பின், மலையேற்றத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்றும் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நிகழாண்டில் இதுவரை 2.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வெள்ளிங்கிரி மலையேறியுள்ளனா். தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் வெள்ளிங்கிரி மலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வரும் காலங்களில் மழை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இதனால், பக்தா்களின் பாதுகாப்புக் கருதி வெள்ளிங்கிரி மலையேற்றத்துக்கான அனுமதி மே 31 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.

வெள்ளிங்கிரி மலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில் சுமாா் 6 டன் அளவில் பிளாஸ்டிக் பொருள்களும், ஈரத் துணிகளும் அகற்றப்பட்டுள்ளன என்றனா்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *