இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் பெரிய கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. சில நாள்களுக்கு முன் மும்பையில் நடிகர்கள் ரஜினி, அமிதாப் பச்சனுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டன. 100 நாள்களைக் கடந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதிகரிக்கும் நட்சத்திர இணைகளின் விவாகரத்து.. என்ன காரணம்?
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
And it is a wrap for our Thalaivar! Superstar @rajinikanth completes filming his portion for Vettaiyan. ️ #VETTAIYAN ️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran #FahadhFaasil @RanaDaggubati @ManjuWarrier4… pic.twitter.com/YPcljJ6vVn
— Lyca Productions (@LycaProductions) May 13, 2024
