பிரதமர் நரேந்திர மோடி போன்று மிமிக்ரி செய்து பிரபலமானவர் நகைச்சுவையாளர் ஷ்யாம் ரங்கீலா (29). ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் 2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பிரதமரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். அப்போது,“நான் வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடுகிறேன்… இந்த ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம், பிரதமருக்கு அவரின் மொழியில் பதில் அளிக்க வாரணாசி வருகிறேன். எனவே, என்னை ஆதரியுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில்,“மாவட்ட ஆட்சியர் என்னிடம் எனது ஆவணங்களில் சிக்கல் இருப்பதாகவும், நான் சத்தியப் பிரமாணம் செய்யவில்லை என்றும்கூறினார். ஆனால், என்னுடன் வழக்கறிஞர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. என்னை தனியாகவே அழைத்தார்கள். என் நண்பர் தாக்கப்பட்டார். மோடி வேண்டுமானால் அழுது நடிக்கலாம்… ஆனால் நான் இங்கு அழ விரும்பவில்லை.
மொத்தமே 27 வேட்புமனுக்கள்தான் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இன்று 32 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. நீங்களே கூறுங்கள் சிரிப்பதா அழுவதா?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கங்கை நதியில் பிரதமர் மோடி
ஷ்யாம் ரங்கீலா வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் ,“அவர் முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு குறைபாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. நீங்கள் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரம் முழுமையடையாமல் இருந்ததாலும், உறுதிமொழியை ஏற்காததாலும் வேட்புமனு ரத்து செய்யப்பட்டது, அதன் உத்தரவின் நகலும் உள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
`முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்று கூறியவரே மோடி தான்; ஆனால், இப்போது..!’ – ஒவைசி தாக்கு
