Sorting by

×

தி.மு.க-வில், வேலூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ஞானம் என்கிற சி.எல்.ஞானசேகரன். இவரது மனைவி அமுதா, வேலூர் ஒன்றியக் குழுத்தலைவராக உள்ளாட்சிப் பதவி வகிக்கிறார். இவர்களது மகன் சரண் தனது நண்பர்களுடன் சேர்ந்து, வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் `அங்கன்வாடி’ மையத்துக்குள் புகுந்து மது குடித்து சிகரெட் புகைத்து… பட்டாக் கத்திகளுடன் `கேங்ஸ்டர்’ தோரணையில் `ரீல்ஸ்’ வீடியோ எடுத்து யூ-டியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ஃபகத் பாசிலின் `ஆவேஷம்’ படத்தில் வரும் `இலுமினாட்டி’ பாடலுக்கு ரீல்ஸ் எடுத்திருக்கின்றனர்.

அங்கன்வாடி மையத்தில்…

அங்கன்வாடி மையத்தில் இளைஞர்களை சேர்த்துக்கொண்டு தி.மு.க பிரமுகரின் மகன் குத்தாட்டம் போட்ட இந்த வீடியோ காட்சிகள் வேலூர் பகுதியில் வைரலாகி, பொதுமக்களிடம் கோபத்தை உண்டாக்கியிருக்கின்றன. “குழந்தைகள் விளையாடி பயிலக்கூடிய அரசுக்குச் சொந்தமான அங்கன்வாடி மையத்தில் இரவு நேரத்தில் இந்தக் கும்பல் அத்துமீறி எப்படி நுழையலாம்?. யார் இவர்களுக்கு அனுமதிக் கொடுத்தது?. குழந்தைகள் அமரும் இடத்தில் மதுபான பாட்டில்களை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டிருக்கின்றனர்.

வகுப்பறை பலகை பின்னால் தெரியும் அளவுக்கு புகை விட்டுக்கொண்டு குடியும், கும்மாளமுமாக வீடியோவை எடுத்து பதிவேற்றம் செய்திருக்கின்றனர். இவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பொதுமக்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு மதுபோதையில் தந்தை வாங்கிக்கொடுத்த புது காரையே கொளுத்தி, தந்தைக்கே வீடியோ எடுத்து அனுப்பி சர்ச்சையில் சிக்கியவர்தான் இந்தச் சரண். அதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.

அங்கன்வாடி மையத்தில்…

இந்த நிலையில், அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ள மகன் விவகாரம் குறித்து தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஞானசேகரனிடமே விளக்கம் கேட்டோம். “ஆமாம். அது, அங்கன்வாடி மையம்தான். கட்டடம் சேதாரமாகியுள்ளது. ரூ.4.96 லட்சத்துக்கு டெண்டர் விட்டு கழிவறை வசதியுடன் அங்கன்வாடி மைய கட்டடத்தை புதுப்பிக்கும் வேலையும் தொடங்கப்பட்டிருக்கிறது. பழைய கட்டடம்தானே என்று அங்குப்போய் என் மகன் `ரீல்ஸ்’ வீடியோ எடுத்து போட்டிருக்கிறார். சினிமாவிலும், ஷார்ட் ஃபிலிமிலும் நடிக்கிறார். தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக கடந்த 2 ஆண்டுகளாக இப்படித்தான் சின்னச்சின்னதாக ரீல்ஸ் எடுத்து போடுகிறார். விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம்’’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

திருப்பூர்: சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்; தனியார் லாட்ஜ் மேலாளர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *