Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

சென்னை: வேலூர், திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடாஜலபதி சுவாமி ஆலய விரிவாக்கம் செய்ய ஏ.சி.எஸ் அறக்கட்டளை சார்பில் அறங்காவலர் ஏ.சி.எஸ் அருண்குமார் நேற்று ரூ.60 லட்சம் நன்கொடை வழங்கினார்.
வேலூரில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சுமார் 5 கோடி மதிப்பீட்டில் வெங்கடாஜலபதி சுவாமி ஆலய விரிவாக்கம் செய்ய ஏ.சி.எஸ் அறக்கட்டளை சார்பாக அதனுடைய அறங்காவலர் ஏ.சி.எஸ் அருண்குமார் ரூ.60 லட்சம் நன்கொடையாக நேற்று வழங்கினார். முன்னதாக கடந்த வருடம் சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வெங்கடாஜலபதி சுவாமிக்கு ஆலயம் கட்ட டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் தேவஸ்தானம் சார்பில் 3 கோடியே 75 லட்சத்தையும், பொதுமக்கள் சார்பில் 1 கோடியே 25 லட்சமும் நிதி திரட்டி இக்கோயில் பணி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post வேலூர் வெங்கடாஜலபதி சுவாமி ஆலய விரிவாக்கம் ஏ.சி.எஸ் அறக்கட்டளை சார்பில் ரூ. 60 லட்சம் நன்கொடை: அறங்காவலர் ஏ.சி.எஸ் அருண்குமார் வழங்கினார் appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *