தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் அதே நேரத்தில் மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடக்கிறது.
அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பதால் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடக்கிறது.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேற்கு வங்க மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பாஜக-வோடு ரகசிய உடன்பாட்டில் இருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், “முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக-வோடு ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் மேற்கு வங்கத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட அதிகாரிகளைத் தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக நியமித்திருக்கின்றனர்.
அதற்கு பதிலாக பாஜக தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை மேற்கு வங்கத்தில் நியமித்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கப் போகிறேன்.
லோக் சபா தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலை திருத்தாத பாஜக, சட்டசபை தேர்தலின்போது மட்டும் அதில் முறைகேடுகள் இருப்பதாக கூறி திருத்தி இருக்கிறது.
அப்படி என்றால் லோக் சபா தேர்தலில் தவறான வாக்காளர் பட்டியல் மூலம் வெற்றி பெற்ற பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவி விலக வேண்டும். அது தான் நியாயமாக இருக்கும்.

மால்டாவில் தேர்தல் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், திரிணமுல் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபரை கைதுசெய்த ஐ.பி.எஸ் அதிகாரியை, தேர்தல் பார்வையாளராக தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். திறமையான அதிகாரிகளை இங்கு பணியாற்ற விடுவதில்லை” என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
