தவெக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலியில் பிரசாரம் செய்திருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசுகையில், இது ‘Care Taker’ அரசாங்கம் என்று பேசியிருந்தார். விஜய் இப்போதைய அரசை காபந்து அரசு என பொருள்பட பேசுவது சரியா?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்திலிருந்தே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். அதன்படி, ஆட்சியில் இருக்கும் அரசின் அதிகாரங்களுக்கும் கட்டுப்பாடுகள் வந்துவிடும். அரசு அலுவலகங்களில் முதலமைச்சரின் படங்கள் அகற்றப்படும். அரசு எந்த கொள்கை முடிவையும் எடுக்க முடியாது.
புதிய திட்டங்களை தொடங்கவோ அடிக்கல் நாட்டவோ முடியாது. எந்த சலுகைகளையும் அறிவிக்க முடியாது. ஆனாலும், முதல்வர் முதல்வர்தான். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட ‘Protocol’ முழுமையாக கடைபிடிக்கப்படும். மேலும், ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டின் மே 7 ஆம் தேதிதான் முதல்வராக பொறுப்பேற்றார். அதனால் இப்போதைய அமைச்சரவைக்கு மே 7 ஆம் தேதி வரைக்கும் காலம் இருக்கிறது.

அதுவரைக்கும் ஸ்டாலின் தான் முதல்வர். இப்போதைய அமைச்சர்களும் அதே பதவியில்தான் நீடிப்பார்கள். எதாவது, அவசரச்சூழல் ஏற்படும் போது தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடும் மேற்பார்வையோடு முதல்வரும் அமைச்சரும் அதிகாரிகளோடு இணைந்து பணியாற்றவும் முடியும். அதனால்தான் இந்த அரசாங்கத்தையும் முதல்வரையும் ‘Care Taker’ என்றோ காபந்து என்றோ கூற முடியாது.
Care Taker அல்லது காபந்து என்பதற்கு பொருளே வேறு. தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஒரு முதல்வர் ராஜினாமா செய்து புதிய முதல்வர் பதவியேற்கும் வரையில் ஒரு இடைப்பட்ட காலம் இருக்கும். அந்த இடைப்பட்ட காலத்தில் இப்போதைய முதல்வரே பொறுப்பில் இருப்பார். அதைத்தான் ‘காபந்து அரசு’ அல்லது ‘Care Taker CM’ எனக் கூறலாம். இப்போது இருப்பது காபந்து அரசாங்கம் அல்ல. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி அதிகாரங்கள் இல்லாமல் இருக்கும் அரசு இது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
