Sorting by

×

டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யுமான ஸ்வாதி மாலிவால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் அவரின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யும், செய்தி தொடர்பாளருமான சஞ்சய் சிங், “நேற்று காலை ஸ்வாதி மாலிவால் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க அவரின் இல்லத்துக்குச் சென்றபோது, அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் பிபவ் குமார் ஸ்வாதி மாலிவாலிடம் தவறாக நடந்து கொண்டார்.

‘ये गंजा… तुम्हारी नौकरी खाऊंगी…’ सामने आया 13 मई को CM आवास पर स्वाति मालीवाल से जुड़ा वीडियो
नोट: ‘आज तक’ इस वीडियो की पुष्टि नहीं करता #SwatiMaliwal #DelhiCMHouse #VibhavKumar pic.twitter.com/RAaBpIsxbO

— AajTak (@aajtak) May 17, 2024

அதைத் தொடர்ந்தே, ஸ்வாதி மாலிவால் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரவிந்த் கெஜ்ரிவால் முழு சம்பவத்தையும் அறிந்துள்ளார் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுப்பார்.” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் ஸ்வாதி மாலிவால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவின் நம்பகத்தன்மை கண்டறியப்படவில்லை.

அந்த வீடியோவில், ஸ்வாதி மாலிவாலை அந்த அறையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்ட ஊழியர்களுடன் ஸ்வாதி மாலிவால் காரசாரமாக விவாதிக்கிறார். தன்னை பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறார். இந்த வீடியோவை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ஸ்வாதி மாலிவால்,“முழுமையில்லாத வீடியோக்களைப் பரப்பி, இந்தக் குற்றத்தைச் செய்த பிறகு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று அவர் நினைக்கிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Swati Maliwal: `மாதவிடாய் என்றபோதும், வயிற்றில் உதைத்தார்’ – கெஜ்ரிவால் PA குறித்து ஸ்வாதி மாலிவால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *