மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.
தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!
இப்படத்துக்கு ’பி.டி. சார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில், ’பி.டி. சார்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் இப்படம் மே 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
