கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணனை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புலியகுளம் பகுதியில், பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “எளிய மனிதர் அம்மன் அர்சுணன். எங்கே சென்றாலும் நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார். குறைந்தபட்சம் 50,000 வாக்கு வித்தியாசத்தில் அம்மன் அர்சுணன் வெற்றி பெறுவார். 10 ரூபாய் பாலாஜி அவருடைய தகுதி என்ன? ஜெயிலில் இருந்தது தான் அவர் தகுதி. அவர் கொடுத்த கொலுசில் வெள்ளி இல்லை. இங்கு வந்தது இரண்டாவது சாதனை. 5 கட்சி மாறி இருப்பது மூன்றாவது சாதனை.
தமிழகத்தில் திமுக ஆட்சி வேண்டாம் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தேஜ கூட்டணி ஆட்சிக்கு வரும். கோவை தெற்கு செந்தில் பாலாஜி வீழ்ச்சி ஆரம்பித்து, சேப்பாக்கம் வரை செல்ல போகிறது. கரூர் திமுகவில் இருந்த 18 சுயேட்சை வேட்பாளர்களை பூத்திற்காகவும், சண்டை போடுவதற்கும், கலவரம் செய்வதற்காகவும் கொண்டு வந்துள்ளார்கள். அனைவருக்கும் ஒரே நோட்டரி போட்டுள்ளார்கள். இவர்களை கோவைக்குள் விடக்கூடாது.

முதல்வர் ஸ்டாலினிடம் இரண்டு பெட்டி கொடுத்தால் அன்பு தம்பி, 5 பெட்டி கொடுத்தால் ஆற்றல் மிகுந்தவர் என்பார், அதிக பெட்டி கொடுத்ததால் தளபதி என்றே செந்தில்பாலாஜிக்கு பெயர் வைத்துள்ளார் முதல்வர். அதிமுகவை அடிமை கட்சி என கூறுகிறார் ஸ்டாலின். அதிக முறை ஆட்சிக்கு வந்த கட்சி அதிமுக, திமுக இல்லை. காங்கிரஸ் முன்பு திமுக பெட்டி பாம்பாக உள்ளது. ஆ.ராசா பேசினால் வழக்கு வரும், அதனால் அவரை பேசாமல் வைத்துள்ளார்கள். நம் கூட்டணியில் குடும்ப ஆட்சி கிடையாது. அண்ணாதுரை நான்கு வளர்ப்பு குழந்தைகளை அரசியலுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் எங்கே? அவர்கள் எல்லாம் அரசு வேலை செய்து வருகிறார்கள். அண்ணாதுரைக்கு நேர் எதிர்க்கட்சி என்றால் அது திமுக தான்.
செந்தில்பாலாஜி கரூருக்கு கூட போக முடியாது. அறிவாலயத்திற்கு தான் செல்ல முடியும். திமுக செய்த சாதனைகளை பற்றி ஸ்டாலின் பேச மாட்டார். தேர்தல் அறிக்கையை தான் கூறுவார். ஸ்டாலின் கணக்கு ஆசிரியர் நல்ல ஆசிரியர், ஆனால் மாணவன் தான் மக்கு. கனிமொழி தூங்கும் போது வந்த கனவை எல்லாம் மைக்கில் பேசுவார். கனிமொழி உங்கள் பெயரில் சிலிண்டர் கணக்கு உள்ளதா? நீங்கள் சிலிண்டர் வாங்கி உள்ளீர்களா? சிலிண்டர் தட்டுப்பாடு என்று பொய் சொல்ல கூடிய ஒரே ஒருவர் கனிமொழி தான். பொய்யை பேசுவதையே ஒரே கொள்கையாக வைத்துள்ளார்கள். 10 ரூபாய் பாலாஜி என ஏன் செல்கிறோம் என்றால், டாஸ்மாக் வருமானம் மட்டும் 5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ஆகும். இதில் பாட்டிலுக்கு ரூ. 10 ரூபாய் மூலம் ரூ.14,950 கோடியை சம்பாதித்துள்ளார். அம்மன் அர்சுணனை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். எடப்பாடியார் முதல்வர் ஆக வேண்டும்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
