Sorting by

×

கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று வெள்ளிக்கிழமை 2026–27-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு அவர் உரையாற்றினார். அப்போது, “அரசியலமைப்பில் வகுத்துள்ள கூட்டாட்சி முறையைப் பின்பற்றாமல் மத்திய அரசு மாநிலத்திற்கு அநீதி இழைக்கிறது. உள்கட்டமைப்பு மற்றும் நீண்டகால பொருளாதார மாற்றத்தில், முதலீடுகளுடன் நலத்திட்டங்களை சமநிலைப்படுத்தும் ஒரு வளர்ச்சி உத்தியை மாநில அரசு பின்பற்றி வருகிறது. நாட்டின் வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும் கர்நாடக மாநிலம் முன்னணியில் உள்ளது. அதிக வரி வருவாயை வழங்கும் முக்கிய மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும்.

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா
சித்தராமையா

2026–27-ம் ஆண்டிற்கான மொத்த செலவு ரூ.4,48,004 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் கர்நாடகா தொடர்ந்து தனித்துவமான பங்கை வகித்து வருகிறது. அதிகரித்து வரும் மொபைல் பயன்பாட்டின் பாதகமான விளைவுகளைத் தடுக்க 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும். அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தைத் தடுப்பதே இந்தத் தடையின் நோக்கமாகும்.

ஐ.ஐ.எஸ்.சி.யின் கீழ் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப பூங்கா, இஸ்ரோ மற்றும் கியோனிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து பெங்களூரு ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு மண்டலம் என்ற ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளாகம் அமைக்கப்படும். கடந்த 2025–26 நிதியாண்டின் தொடக்கத்தில், கர்நாடகாவின் ஜிஎஸ்டி வருவாய் ஒவ்வொரு மாதமும் சுமார் 10% என்ற ஆரோக்கியமான வேகத்தில் வளர்ந்து வந்தது. ஆனால், ஜிஎஸ்டி வரி விகிதங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு (Restructuring) பிறகு, இந்த வளர்ச்சி வேகம் 4% ஆகக் கடுமையாகக் குறைந்துவிட்டது.

சிறுவர்கள் மொபைல்
சிறுவர்கள் மொபைல்

வரி விகித மாற்றங்களால் கர்நாடக அரசுக்கு வர வேண்டிய வருவாயில் மிகப் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் (2025-26) சுமார் ரூ. 10,000 கோடி வருவாய் குறையும். அடுத்த நிதியாண்டில் (2026-27) சுமார் ரூ. 15,000 கோடி வருவாய் குறையும். மொத்தமாக இரண்டு ஆண்டுகளில் மட்டும் கர்நாடக அரசுக்கு சுமார் ரூ.25,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அல்லது ஜிஎஸ்டி கவுன்சில் சில பொருட்களுக்கான வரி விகிதங்களைக் குறைத்திருக்கலாம் அல்லது மாற்றியிருக்கலாம். கர்நாடகா ஒரு பெரிய நுகர்வு மாநிலமாக இருப்பதால், இந்த வரி மாற்றங்கள் நேரடியாக மாநில அரசுக்கு வரும் பணத்தைக் குறைத்துவிட்டன. வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்த 6% சரிவு மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.” எனக் குறிப்பிட்டார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *