நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது,“எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி இடஒதுக்கீட்டின் மிகப்பெரிய ஆதரவாளர் பிரதமர் மோடி. வடக்கு தெற்கு என பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். தனி நாடு என்று யாராவது சொன்னால், அது மிகவும் ஆட்சேபனைக்குரியது… இந்த நாட்டை பிரிக்க முடியாது.
ராகுல் காந்தி – மோடி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் வட இந்தியாவையும், தென்னிந்தியாவையும் பிரிக்க வேண்டும் என்று பேசினார், அதை காங்கிரஸ் கட்சியும் மறுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டத்தை பற்றி நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டின் அரசியலில் ஸ்திரத்தன்மையை உருவாக்க 400-க்கும் மேற்பட்ட இடங்கள் தேவை. அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கான ஆணை பா.ஜ.க-விடம் இருக்கிறது. ஆனால் ஒருபோதும் நாங்கள் அதை செய்யவில்லை.
எல்லைகளைப் பாதுகாக்கவும், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றவும், ஏழைகளின் நலனை உறுதிப்படுத்தவும் பா.ஜ.க விரும்புகிறது. இந்த தேர்தலில் 272 இடங்களுக்கு குறைவாக வெற்றி பெற்றால், பா.ஜ.க-வின் நடவடிக்கை என்னவாக இருக்கும்… பாஜக-வின் பி பிளான் என்ன எனக் கேட்கிறீர்கள். அப்படி நடப்பதற்காக எந்த சூழலையும் நான் காணவில்லை. 60 கோடி பலம் வாய்ந்த பயனாளிகள் கொண்ட ராணுவம் பிரதமர் மோடியுடன் நிற்கிறது.
அமித் ஷா
அவர்களுக்கு ஜாதியோ, வயதோ கிடையாது… அவர்கள் மீண்டும் பிரதமராக மோடியையே பார்க்கிறார்கள். எனவே, பிளான் ஏ வெற்றிபெற 60%-க்கும் குறைவான வாய்ப்பு இருக்கும்போது மட்டுமே பிளான் பி உருவாக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி அமோக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
“கெஜ்ரிவாலே ஜாமீனில்தான் வந்துள்ளார்; 2024 மட்டுமல்ல, 2029-லும் மோடி தான்..!” – ராஜ்நாத் சிங்
