Sorting by

×

சென்னை: இந்த ஆண்டு நாடு முழுவதும் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதில் தமிழகமும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்தாலும் சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன் ஹீட் வெயில் பதிவாகாமல் இருந்தது.

அதன்பிறகு, கடந்த மே 1-ம் தேதி முதன்முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக அளவில் சென்னையில் கடும் வெயில் பதிவாகி வருகிறது. அதன்படி கடந்த திங்கள்கிழமை 105 டிகிரி, செவ்வாய்க்கிழமை 106 டிகிரி, புதன்கிழமை 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *