ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூரில் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று(மே 16) கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கை சற்று நேரத்திற்கு முன்பு வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட நிலையில்,
தற்போது, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூரில் ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்ற எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மே 18, 19 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
