Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

புதுடெல்லி: மக்களவை 4வது கட்ட தேர்தலிலும் பா.ஜ வீழ்ச்சி அடைந்து இருப்பதால் இன்னும் 3 வாரத்தில் மோடிக்கு பிரியாவிடை அளிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மக்களவை 4ம் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இத்துடன் நாடு முழுவதும் 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்து விட்டது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில்,’ தற்போது நான்கு கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில் மோடியின் பிரியாவிடை இன்னும் சரியாக மூன்று வாரங்களில் நடக்க உள்ளது. தெற்கில் தெளிவாக தெரிகிறது. வடக்கு மேற்கு, கிழக்கில் கூட பாதி கூட கிடைக்காது. தென் மாநிலங்களில் பாஜ முற்றிலும் அழிக்கப்படும். மற்ற மாநிலங்களில் அதன் பலம் பாதியாகக் குறையும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* பாஜவுக்கு ‘00’ சான்ஸ் அகிலேஷ் உற்சாகம்
சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் எக்ஸ் தளத்தில்,’ மக்களவை தேர்தல் 4 கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு, 400 தொகுதியில் வெல்வோம் என்ற பாஜவின் கூற்றில் இருந்து பொதுமக்கள் ‘4’ ஐ காணாமல் ஆக்கியுள்ளனர். இப்போது பாஜ ஆட்சி அமைக்க 00 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post 4வது கட்ட தேர்தலிலும் பா.ஜவுக்கு வீழ்ச்சி இன்னும் 3 வாரத்தில் மோடிக்கு பிரியாவிடை: காங்கிரஸ் உற்சாகம் appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *