Sorting by

×

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளை வென்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணி பாகிஸ்தானையே மீட்டுக் கொண்டுவந்துவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பதற்கு, 400 தொகுதிகளில் வெற்றிபெறாவிட்டால் பாகிஸ்தானை மீட்கமாட்டீர்களா? என்று கபில் சிபல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளில் வென்றால், பாகிஸ்தானையே மீட்டுக் கொண்டு வருவோம் என்று கூறியிருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நாள்தோறும் 10,000 நடை என்பது கட்டுக்கதையா?

அதற்கு பதிலளித்த கபில் சிபல், அமித் ஷா சொல்கிறார், நாங்கள் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்றால், பாகிஸ்தானையே மீட்டுக்கொண்டு வருவோம் என்று. ஒருவேளை, அவ்வளவு தொகுதிகளில் வெல்லவில்லை என்றால், பாகிஸ்தானை மீட்டுக் கொண்டு வர மாட்டீர்களா? முதலில் நீங்கள் சீனாவுக்கு விட்டுக்கொடுத்த 4000 கிலோ மீட்டர் தொலைவு நிலப்பகுதியை மீட்டுக் கொடுங்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது ஆட்சேபனைக்குரியது என்று அமித் ஷா கூறியிருக்கிறார். ஆனால், உள்துறை அமைச்சருக்கு சட்டம் பற்றிய அறிவு இருந்திருந்தால், இதுபோன்ற ஒரு கருத்தை அவர் சொல்லியிருக்க மாட்டார் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *