Sorting by

×

நாகர்கோவில்: பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் நாளை (மே 30) முதல் 45 மணி நேரம் தியானம் மேற்கொள்கிறார். சுவாமி விவேகானந்தர் இதேபாறையில் 3 நாள் தவமிருந்த 142 ஆண்டுகளுக்கு பின்னர் பிரதமர் மோடி தியானம் செய்வதால் இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: மக்களவை இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியுடன் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமை உடன் நிறைவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. கடந்த இரு தேர்தல் முடிவடைந்ததுமே பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். 2014-ல் உத்தரப் பிரதேசத்தில் பிரதாப்கரில் தியானம் செய்தார். 2019-ல் இமயமலையில் கேதார்நாத் குகையில் மின்வசதி இல்லாத அறையில் காவி உடையுடன் தியானம் மேற்கொண்டார். இந்நிலையில் நடப்பு தேர்தல் முடியும் தருவாயில் பிரதமர் மோடி இந்தியாவின் கடைகோடியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாள் தொடர்ச்சியாக 45 மணி நேரம் தியானம் மேற்கொள்ள இருக்கிறார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *