பெங்களூரு வொயிட்ஃபீல்ட்டில் உள்ள அலெம்பிக் பகுதியில் 6 லட்சத்து 49 ஆயிரம் சதுர அடி அலுவலக இடத்தை கூகுள் வாடகைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சதுர அடி ரூ.62 என்ற கணக்கில் மாதம் ரூ.4 கோடி வாடகைக்கு இந்த இடம் கூகுளால் ஒப்பந்தம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் பல நகரங்களில் தனது விரிவுபடுத்தலை மேற்கொண்டுவரும் கூகுள் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
2022-ல் கூகுள் ஹைதராபாத்தில் 6 லட்சம் சதுர அடி கொண்ட அலுவகத்தை வாடகைக்கு எடுத்தது.
2020-ல் இந்தியாவில் கூகுளின் அலுவகங்கள் அமைந்துள்ள பரப்பு 3.5 மில்லியன் சதுர அடியிலிருந்து 5 நகரங்களில் 9.3 மில்லியன் சதுர அடி அளவுக்கு விரிவாகியுள்ளது.
செல்போன் மற்றும் டிரோன்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யவுள்ள கூகுள் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் உற்பத்தி மற்றும் சேவை பணிகளை அதிகரிக்கவுள்ளது.
கரோனா காலகட்டத்துக்கு பிறகு முடங்கியிருந்த அலுவலகங்களின் நேரடி பணியிடங்களை பெருநிறுவனங்கள் மீண்டும் தற்போது விரிவாக்க தொடங்கியிருப்பதன் அறிகுறியாக கூகுளின் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
