Sorting by

×

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வியாழக்கிழமை (மே 16) வெளியிட்ட அறிக்கை:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று (மே 16) தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மே 18, 19 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *