தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பானு சந்தர் ரெட்டி (32). இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பீபி ஷாஜியா சிராஜ் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக வேலை செய்துவந்த பானு சந்தர் ரெட்டி, கடந்த ஆண்டு ஏஐ (AI) காரணமாக ஏற்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் வேலை இழந்தார். அதனால் இந்தியா வந்தவர் தொடர்ந்து வேலை தேடிக்கொண்டிருந்தார். இதற்கிடையில், பீபி ஷாஜியா சிராஜுக்கு பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அதனால், இந்த தம்பதி 8 மாதங்களுக்கு பெங்களூரின் கோத்தனூர் பகுதியில் குடியேறியது.

இந்த நிலையில், பீபி ஷாஜியா சிராஜ் சில தினங்களுக்கு முன்பு ஹைதரபாத் சென்றிருந்தார். நேற்று காலை 7:30 மணியளவில் பெங்களூரு திரும்பியிருக்கிறார். வீட்டுக் கதவை தட்டியபோது கதவு திறக்கவே இல்லை. இதனால் பதற்றமடைந்த பீபி ஷாஜியா சிராஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது பானு சந்தர் ரெட்டி மின்விசிறியில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து உடனே காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கியது. சடலத்துடன் அறையில் தற்கொலை குறிப்பும் இருந்தது. அதில், பொருளாதார பிரச்னைகள், வேலை இல்லததால் ஏற்பட்ட விரக்தி, உடல் நலப் பிரச்னைகள் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சடத்துக்கு அருகில் அமைதியாக அமர்ந்திருந்த பீபி ஷாஜியா சிராஜ் சுமார் 20 நிமிடங்கள் அமர்ந்திருந்தவர், திடீரென அங்கிருந்து மாயமானர். அடுத்த சில நிமிடங்களில் 18-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அமைதியாக தொடங்கிய அந்தக் காலை வேளை, அடுத்தடுத்த கணவன் மனைவியின் தற்கொலை முடிவுகள் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, கடிதத்தின் உள்ளடக்கம் மற்றும் தம்பதியினரின் சமீபத்திய நிதி மற்றும் தனிப்பட்ட சவால்கள் உட்பட, மரணங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராய்ந்து, காவல்துறை தங்கள் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. வேலையின்மை தொடர்பான கவலையுடனும், சமீபத்திய மாதங்களில் அதிகரித்து வரும் அழுத்தங்களுடனும் அந்த நபர் போராடி வந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலதிக விசாரணை நடந்து வருகிறது.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
