டொனால்ட் ஜெ ட்ரம்ப் – ‘இரண்டாவது முறையாக’ அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று, நாளையுடன் (ஜனவரி 20) ஓராண்டு முடிவடைகிறது. இந்த ஓராண்டிலேயே ட்ரம்பின் அதிரடிகளால் உலக நாடுகளும், உலக நாடுகளின் பொருளாதாரமும் திணறிவிட்டன. கடந்த ஓராண்டாக, ‘அமெரிக்க அதிபர்’ ட்ரம்ப் செய்த ‘சம்பவ’ங்களைப் பார்க்கலாமா? ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் முதன்முதலாக கையில் எடுத்த பெரிய அஸ்திரம், ‘வெளியேற்றம்’. வெளியேற்றம் ட்ரம்பிற்கே tariff-ஆ? – தனித்துவிடப்படுமா அமெரிக்கா? – ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்! “அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக பலர் […]
Author: dailymailhub.in

குடிநீர் vs பல்லுயிர்: `மாமல்லன் நீர் தேக்கத்தின் இரு முகங்கள்’- உப்பங்கழியைப் பலி கொடுக்கிறதா அரசு?
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை அடுத்த நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் 342 கோடி ரூபாய் செலவில் புதிதாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது. 4,375 ஏக்கர் பரப்பளவில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்படும் மாமல்லன் நீர்த்தேக்கம் சென்னையின் 6-வது நீர்த்தேக்கமாகும். இந்த நீர்தேக்கம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்றச் செய்தி வந்தவுடன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், “நாளை முதல்வர் அடிக்கல் நாட்டப் போகும் “மாமல்லன் நீர்த்தேக்கம்” , […]

மோடியின் தமிழக வருகை; மேடையேறப் போகும் கட்சிகள் எவை? – என்.டி.ஏ கூட்டணிக்கு அழுத்தமா?
ஜனவரி 23 ஆம் தேதியன்று பிரதமர் மோடி சென்னை வருகிறார். அப்போது நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அத்தனை பேரையும் மேடை ஏற்ற வேண்டும் என்பது பாஜக-வின் திட்டமாக இருக்கிறது. அதிமுக – பாஜக கூட்டணி வலுப்பெறுமா? ஆனால் அன்புமணியின் பாமக-வும், G.K வாசனின் தமிழ் மாநில காங்கிரஸும் மட்டும்தான் தற்போது வரை அதிமுக – பாஜக கூட்டணியில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிடிவி தினகரனும், பிரேமலதாவும் […]

திருப்பூர்: கர்நாடகக் கொடியை அகற்றச் சொல்லி வற்புறுத்தல்; கண்டனம் தெரிவித்த சீமான்!
தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே சென்று கொண்டிருந்த கர்நாடக வாகனத்தை மறித்து, அதில் பொருத்தப்பட்டிருந்த கர்நாடக மாநிலக் கொடியை அகற்றச் சொல்லி, அதில் பயணித்தவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்கியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டிருக்கிறார். சீமான் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “கர்நாடக மாநிலக் கொடியை அகற்றச்சொல்லி, அதில் பயணித்தவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்கியிருப்பது […]

`குடும்பத்தை நாசமாக்கியவர்’ – பா.ஜ.க எம்.எல்.ஏ-வான மனைவியை விவாகரத்து செய்கிறாரா முலாயம் சிங் மகன்?
சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் இப்போது கட்சிக்குத் தலைமை ஏற்றுள்ளார். மற்றொரு மகனான பிரதீக் யாதவ் அரசியலில் ஈடுபடவில்லை. அவர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவியான சாத்னா குப்தாவின் மகனான பிரதீக், அபர்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். அபர்ணா பா.ஜ.க சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். எப்போதும் ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் பிரதீக்கிடம் ரூ.5 […]

திருவையாறு: சேதமடைந்த சாக்கடை – சாலை; நிலவும் சுகாதார சீர்கேடு; அலட்சியம் தவிர்ப்பார்களா அதிகாரிகள்?
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு மேல வீதியில் உள்ள சாக்கடை உடைந்து 8 மாதங்களாகியும் சரி செய்யவில்லை என்று குறைபடும் பொதுமக்கள், அதை உடனடியாகச் சீரமைத்து சுகாதாரத்தை உறுதிசெய்ய கோரிக்கை விடுத்தது வருகிகின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள், “இந்தச் சாலையை ஒட்டி அமைஞ்சிருக்க சாக்கடை உடைஞ்சு மாசக்கணக்குல சுகாதார சீர்கேடு நிலவிட்டு இருக்குது. இதைப் பத்தி எட்டு மாசமா நிறைய பேர் கேட்டுட்டுப் போறாங்க. ஆனா யாருமே இதை சரி செய்ய முன் […]

கவுன்சிலர்கள் கட்சி தாவும் அபாயம்; ஹோட்டலில் வைத்து பாதுகாக்கும் ஷிண்டே; என்ன நடக்கிறது மும்பையில்?
மும்பை மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியைப் பிடிக்க 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது. பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களில் வெற்றிபெற்று இருக்கிறது. தானே மாநகராட்சியைத் தவிர்த்து வேறு எந்த மாநகராட்சியிலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா வெற்றி பெறவில்லை. மும்பையில் பா.ஜ.க ஆட்சியமைக்க சிவசேனா(ஷிண்டே)வின் தயவு தேவையாக இருக்கிறது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சி […]

ஓமலூர்: வாடகைப் பிரச்னை; மதுப்பிரியர்கள் தொல்லை… காய்கறிச் சந்தையில் கால்வைக்காத வியாபாரிகள்!
சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் புதிதாக சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, தமிழ்நாடு நகராட்சித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரால் 22.02.2025 என்று திறப்பு விழா கண்ட காய்கறி சந்தை, இன்று வரை பயன்பாட்டுக்கு வராமல் மது பிரியர்களுக்கான முழு நேர மதுக்கூடமாக மாறியுள்ளது, கவலையடையச் செய்கிறது. இது குறித்து தகவல் நமக்கு கிடைத்தவுடன், நேரடியாகச் சென்று விசாரித்தோம். மின்சாரம் வசதி, தண்ணீர் வசதி மற்றும் கழிவறை வசதி என அடிப்படை வசதிகள் […]

ட்ரம்பிற்கே tariff-ஆ? – தனித்துவிடப்படுமா அமெரிக்கா? – ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்!
‘பாதுகாப்புக் காரணங்களுக்காக’ கிரீன்லேண்டைப் பிடித்தே தீர வேண்டும் என்கிற கடும் முயற்சியில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அவருக்குத் தேவையான ஆதரவை நேட்டோ நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் தரத் தயாராக இல்லை. இதனால், ட்ரம்ப் டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகளுக்கு 10 சதவிகித வரி விதித்துள்ளார். இந்த வரி வரும் பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. ஒருவேளை, வரும் ஜூன் மாதத்திற்கு மேலேயும், கிரீன்லேண்ட் […]

ஓய்வூதியத் திட்டம்: “அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தும் பழனிசாமி ஏன் பதறுகிறார்?” – அன்பில் மகேஸ்
“2003-ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? பழனிசாமி ஏன் பதறுகிறார்?” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார். பழனிசாமி ஏன் பதறுகிறார்? இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதற்றப்படுவதை அவரது பேட்டிகளும் அறிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த […]

