Sorting by

×

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

இந்த ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு மாற்றப்பட்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கேப்டான மாற்றப்பட்டார். இதனால் ரோஹித் சர்மா ரசிகர்கள் விரக்தியடைந்து ஹார்திக் பாண்டியாவை கிண்டல் செய்தனர். ஹார்திக் கேப்டன் ஆனதும் மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லை. மீண்டும் பிளே ஆஃப்-க்கு தேர்வாகவில்லை. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதனால் ஹார்த்திக்கின் கேப்டன்சியை பலரும் விமர்சித்து வருகிறார்கள். பாா்சிலோனாவுக்கு மெஸ்ஸி ஒப்பந்தமாக பயன்பட்ட நேப்கின் ரூ.8 கோடிக்கு […]

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் சட்டவிரோத ஆள்சேர்ப்பு வழக்கில் கைது செய்யப்படுவதை எதிர்நோக்குவதாகவும், அவர் பாஜகவால் மிரட்டப்பட்டுள்ளார் என்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி கூறியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் அதிஷி கூறுகையில், ஸ்வாதி மாலிவால் முதல்வர் கேஜரிவாலை சந்திக்கப்போவதாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சந்திக்கச் சென்றுள்ளார். முதல்வரைச் சந்திக்க வருவதாக அவர் ஏன் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. முதல்வர் கேஜரிவால் அன்று வேறு பணியில் இருந்ததால் மாலிவாலை சந்திக்க இயலவில்லை. அதனால் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. […]

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! – முதல்வர் ஸ்டாலின்

மதவெறுப்பு பிரசாரம் கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். உத்தர பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை – பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியிருப்பது மலிவான தந்திரம் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலத் தலைவர்கள் உத்தரப்பிரதேச மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதாக பிரதமர் மோடி பேசியிருப்பது அவரின் “கற்பனைக் கதைகள் […]

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? – அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 3 நாளில் இருவர் பலியாகியுள்ள நிலையில், அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்த ராமையா புகலா என்ற மாணவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி […]

‘விரக்தியில் பிரதமர் மோடி’ – முதல்வர் ஸ்டாலின் கருத்து!

பிரதமர் மோடி, மாநிலங்களுக்கிடையே மோதலையும் வெறுப்புணர்வையும் தூண்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் இலவசப் பேருந்துகளின் பயன்பாடு அதிகரித்ததால், மெட்ரோ ரயில்களின் பயன்பாடு குறைந்து, அதன் வருவாயும் குறைந்து வருவதாகக் கூறியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் பதிவொன்றினைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், பிரதமர் மோடி கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்றும், பிரதமர் வீண்பழி போடுவதாகவும் கூறியுள்ளார். 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில், […]

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: `முழுமையில்லாத வீடியோக்களைப் பரப்பி..!’ – ஸ்வாதி மாலிவால் காட்டம்

டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யுமான ஸ்வாதி மாலிவால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் அவரின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யும், செய்தி தொடர்பாளருமான சஞ்சய் சிங், “நேற்று காலை ஸ்வாதி மாலிவால் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க அவரின் இல்லத்துக்குச் சென்றபோது, அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் பிபவ் குமார் ஸ்வாதி மாலிவாலிடம் தவறாக நடந்து கொண்டார். ‘ये गंजा… […]

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் ’கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய் சேதுபதி 51: படத் தலைப்பு டீசர் வெளியீடு! விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள […]

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகக் கோடை விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிய இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய, 24 மணி நேரம் […]

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

குருகிராம்: ஹரியானா மாநிலம் நூ வட்டம் டவுரு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த புனித யாத்திரை பேருந்து சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் இருந்த 8 பேர் உயிருடன் எரிந்து பலியாகினர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஞ்சாப் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் புனித யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு தனியார் சுற்றுலாப் பேருந்தில் சென்றுவிட்டு மதுரா-பிருந்தாவனில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஹரியானா குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச் சாலையில் […]

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

சின்னத்திரை தொடரான சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து டாடா படத்தின் மூலம் சினிமாவில் கவின் பிரபலமடைந்தார்.பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக அதிதி எஸ். போஹன்கர் நடித்துள்ளார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் […]