திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த பசுமாட்டை பிக்கப் வேனில் கடத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பாச்சல் கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி தனது மாட்டை வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்தார். அது திடீரென காணாமல் போன நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது பிக்கப் வேனில் வந்த சிலர், மாட்டை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் தட்சிணாமூர்த்தி புகார் அளித்த நிலையில், விசாரணை நடைபெறுகிறது….
