Sorting by

×

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது அங்கங்கே பயணம், பிரசாரம் என அரசியல் களப் பரபரப்பிற்குச் சொல்லவே வேண்டாம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கிறார். இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருக்கிறார்.

இரண்டு நாள்களுக்கு முன்னால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்திருந்தார்.

என்.டி.ஏ கூட்டணியின் அடுத்தடுத்த டெல்லி பயணங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அமித்ஷா உடனான சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்தார் டிடிவி தினகரன்.

அமித்ஷா
அமித்ஷா

அப்போது அவர் பேசியதாவது…

“நாங்கள் எல்லாம் டெல்லி வந்தாலே முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுகிறார். ‘தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியைப் பெற்று தரமாட்டார்களா?’ என்று எங்களைக் கேட்கிறார்.

சரியான புரிதல் இல்லாமல் டெல்லியோடு நீங்கள் குழாய் அடி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸிற்குப் பிறகு நாங்கள் எப்படி நிதியைப் பெற்று தரமுடியும்? இது தேர்தல் காலம்.

அதனால், திமுகவை எப்படி விழ்த்துவது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி… நிதி… என்று கூறுகிறார்கள். ஆனால், கடந்த 12 ஆண்டுகளில், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 12 லட்சம் கோடி வழங்கியிருக்கிறது.

2004-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை, காங்கிரஸ் ஆட்சியில் 3 லட்சம் கோடி தான் நிதி வந்திருக்கிறது.

எஸ்.சி, எஸ்.டிக்கான நிதியை ரூ.5,000-க்குச் செலவு செய்துவிட்டார். இது ‘கடை தேங்காயை வழி பிள்ளையாருக்கு உடைத்தது போல’ இருக்கிறது.

தமிழ்நாடு அரசு நிதி ஆளுகையைச் சரியாக செய்யவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சி.எஸ்.கேவிற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை?

பணியிடை மாற்றம், போஸ்டிங் எனக் கிட்டத்தட்ட ரூ.2,500 ஊழலை அமலாக்கத் துறை கண்டுபிடித்திருக்கிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால், சென்னை உயர் நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க சொல்லி தமிழ்நாட்டு அரசின் தலையில் குட்டியிருக்கிறது.

தவறு செய்தால் டெல்லியைக் கண்டு பயப்பட தான் செய்வார்கள்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

சி.எஸ்.கே-விற்குத் தலைமை தாங்குவது தோனி. அதில் எத்தனை பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்? இதற்கு சென்று முதலமைச்சர் போராடச் சொல்லுங்கள்.

பஞ்ச பாண்டவ கூட்டணி

டெல்லி, தமிழ்நாடு என்று கூறி இனி மக்களை ஏமாற்ற முடியாது.

டெல்லியில் இவர்கள் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு எத்தனை கெட்ட பெயர், அவமானம் என்று அனைவருக்கும் தெரியும்.

தமிழ்நாட்டில் திமுகவை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாகத் தோற்கடிக்கும். அதற்கான ஸ்ட்ரேட்டஜியைப் பேசதான் வந்தேன்.

பீகாரைப் போல எல்லாரும் ஒற்றுமையாக இருந்து, ஒவ்வொரு தொகுதியிலும் பூத் லெவலில் ஒற்றுமையாக உழைப்போம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக என்பதை எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் மறுத்துவிட்டார்கள்.

ராமதாஸ் - சசிகலா
ராமதாஸ் – சசிகலா

ராமதாஸ் – சசிகலா கூட்டணியைச் சேர்ப்பதற்கான வாய்ப்பு இல்லை. இப்போது நாங்கள் முழுமையாக உள்ளோம்.

திமுக என்னும் துரியோதன கூட்டணியை வீழ்த்த எங்களது பஞ்ச பாண்டவ கூட்டணி வலுவாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்.

திமுகவிற்கான ஒரே மாற்று அதிமுக தலைமையிலான எங்களது கூட்டணி.

தமிழ்நாட்டிற்கான நிதி வரவில்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். மத்திய அரசிடம் இருந்து எளிதாக நிதி பெற்றுத்தரக் கூடியது எங்களது கூட்டணி”.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *