அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ‘கிரீன்லாந்து’ மீதிருந்த டார்கெட் சென்று, இப்போது ‘கியூபா’விற்கு வந்திருக்கிறது போலும்.
நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ட்ரம்ப். அப்போது அவரிடம் அமெரிக்காவிற்கு ஈரான், கியூபா போன்ற நாடுகளுடன் இருக்கும் பிணக்கு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அமெரிக்காவின் கைகளுக்கு செல்கிறதா கியூபா?
.
இந்தக் கேள்விக்கு ட்ரம்ப், “கியூபா அரசு நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் பெரிய பிரச்னையில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

அவர்களிடம் பணம் கிடையாது. அவர்களிடம் இப்போது ஒன்றுமே கிடையாது. அவர்கள் நம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
ஒருவேளை, தோழமை ரீதியில் கூட, நாம் கியூபாவைக் கைப்பற்றலாம்.
அவர்களிடம் இப்போது பணம் இல்லை, எண்ணெய் இல்லை, உணவு இல்லை. அதனால், அவர்களுக்கு நமது உதவி தேவைப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ இந்த விஷயத்தைக் கையாண்டு வருகிறார்” என்று பதிலளித்துள்ளார்.
கியூபா…
கியூபா என்றால் கம்யூனிஸம் என்பது அனைவரும் அறிந்தது தான்.
தற்போது கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது.
கியூபாவில் பொருளாதாரம் சரிந்து கிடக்கிறது. வெனிசுலா அதிபரை ட்ரம்ப் சிறைபிடித்ததில் இருந்து கியூபாவிற்கு கிடைக்கும் நிதி உதவி சுணங்கி உள்ளது… அவர்களுக்கு அதுவரை கிடைத்து வந்த மானிய விலையிலான எண்ணெய்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலை ட்ரம்ப் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார். ஏற்கெனவே, கடந்த இரண்டு மாதங்களாக கியூபாவில் ஆட்சி மாற வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார் தான்.
தனது அண்டை நாடான கியூபா தனக்கு எதிராகவும், தன் போட்டி நாடுகளுக்கு தோழராகவும் இருப்பது அமெரிக்காவிற்கு சிக்கல் தான். அதனால், கியூபாவைக் கைப்பற்ற பார்க்கலாம் ட்ரம்ப்.
ஆக, கியூபா அமெரிக்காவின் 51-வது நாடாக மாறுமா என்பதற்கு விரைவில் காலம் பதில் சொல்லுமோ?
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
