ஐ.நா சபையின் பாதுகாப்புத்துறையில் பணிபுரிந்த முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி கர்னல் வைபவ் அனில் காலே, 2022-ம் ஆண்டு இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஐ.நா பாதுகாப்புத் துறையில் (டி.எஸ்.எஸ்) பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில், காஸாவின் ரஃபாவில் ஐ.நா சபையின் வாகனம்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கர்னல் வைபவ் அனில் காலே உயிரிழந்தார்.
கர்னல் வைபவ் அனில் காலே
இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்னல் வைபவ் அனில் காலே இறந்தது குறித்து இந்தியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறது. இது குறித்து அமெரிக்காவின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காஸாவின் ரஃபா பகுதியில் மே13 அன்று ஐ.நா பாதுகாப்புத் துறையின் (டிஎஸ்எஸ்) பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி, கர்னல் வைபவ் அனில் காலே இறந்ததற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம், கர்னல் வைபவ் அனில் காலேவின் உடலை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இறந்தவரின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எங்களது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பின்னர் ஐ.நா-வின் சர்வதேச ஊழியர் ஒருவர் இறப்பது, இதுவே முதன்முறை எனக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
ஜம்மு-காஷ்மீர் விவகாரம்; ஐநா-வின் மனித உரிமைகள் ஆணையரின் கருத்துக்கு இந்தியா வருத்தம்!
