Sorting by

×

பிரதமர் மோடி கடந்த 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசியில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை வாரணாசியில் மோடி இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில், மோடியின் சொத்து விவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

மோடி – வாரணாசி

அதில், அவரின் கல்வித் தகுதியைப் பொறுத்தவரையில் 1967-ல் எஸ்.எஸ்.சி படிப்பை மோடி முடித்ததாகவும், 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், 1983-ல் அகமதாபாத்திலுள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல், எந்தவொரு காவல் நிலையத்திலும் மோடி மீது எஃப்.ஐ.ஆர் எதுவும் இல்லையென்றும், நீதிமன்றங்களில் எந்தவொரு வழக்கிலும் குற்றவாளியாக மோடி பெயர் இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மோடியின் சொத்து விவரங்களைப் பொறுத்தவரையில், வீடு உள்ளிட்ட அசையா சொத்துகள் எதுவும் இவர் பெயரில் இல்லையென்று பிரமாணப் பத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதேசமயம், மோடியின் பெயரிலிருக்கும் அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு மூன்று கோடியே இரண்டு லட்சம் ரூபாய் என கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

மோடி

இதில், கையிலிருக்கும் ரொக்கத்தின் மதிப்பு ரூ.52,920. காந்திநகர் எஸ்.பி.ஐ வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்தின் மதிப்பு ரூ.73,304. வாரணாசி எஸ்.பி.ஐ வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்தின் மதிப்பு ரூ.7,000. மேலும், எஸ்.பி.ஐ வங்கியில் மோடியின் பெயரில் இருக்கும் வைப்பு நிதியின் மதிப்பு (Fixed Deposit) ரூ.2,85,60,338. தபால் துறையில் இருக்கும் நேஷனல் சேவிங்ஸ் செர்டிஃவிகேட் (NSC) திட்டத்தில் மோடி பெயரில் இருக்கும் பணத்தின் மதிப்பு ரூ.9,12,398. 2023-24 நிதியாண்டுக்கான பிடித்தம் செய்யப்பட்ட TDS மதிப்பு ரூ.3,33,179.

மோடி

இதுதவிர, ரூ.2,67,750 மதிப்பில் 45 கிராமில் நான்கு தங்க மோதிரங்கள் மோடி வசம் இருக்கிறது. இவ்வாறு, மோடியின் அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.3,02,06,889. அதேசமயம், மோடியின் பெயரில் கார் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் இல்லையென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. வருமானத்தைப் பொறுத்தவரை, பிரதமர் அலுவலகத்திலிருந்து சம்பளமும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்தின் மீது கிடைக்கும் வட்டியுமே வருமானத்தின் வழி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், அசையா சொத்துகள் எதுவும் இல்லை என்று பிரமாணப் பத்திரத்தில் மோடி தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Varanasi: ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் வேட்புமனு தாக்கல் செய்த மோடி; அவரை முன்மொழிந்த நால்வர் யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *