Sorting by

×

உடல்நலக்குறைவால் உயிரிழந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜின் உடலுக்கு இன்று இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான எம்.செல்வராஜூக்கு, கடந்த ஒன்றாம் தேதி மன்னார்குடியில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, நுரையீரல் தொற்று காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மே 2 ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் செல்வராஜ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிற்றுக்கிழமை இறந்த நிலையில், உடல் சொந்தவூர் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்துகின்றனர்.. |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *