இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனேயின் புத்தகம் ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’. இந்தப் புத்தகம்தான் கடந்த வாரத்தில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைப் பரபரப்பாக்கி வருகிறது.
இந்தப் புத்தகத்தில் 2020-ம் ஆண்டு நடந்த இந்தியா – சீனா தாக்குதலில் இந்திய அரசு ராணுவத்துடன் ஒத்துழைக்காதது குறித்து குறிப்பிட்டிருக்கிறார் நாரவனே.
இதை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி படிக்க முயன்றபோது, நாடாளுமன்றத்தில் அமளிதுமளியானது.
இதையடுத்து இந்தப் புத்தகம் இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றது.

பென்குயின் நிறுவனத்தின் பதில்
இந்தப் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அதன் நகல்கள் ஆன்லைனில் சுற்றி வருகின்றன.
இது குறித்து இந்தப் புத்தகத்தின் உரிமையை வைத்திருக்கும் பென்குயின் இந்தியா நிறுவனம், “நாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை. இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது” என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
நாரவனே ‘ஒற்றை’ பதில்
இந்தப் புத்தகம் பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியதில் இருந்து ஜெனரல் நாரவனே எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஆனால், நேற்று பென்குயின் நிறுவனத்தின் பதிவை ஷேர் செய்து, ‘இதுதான் இந்தப் புத்தகத்தின் ஸ்டேட்டஸ்’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கு மேல், அந்தப் புத்தகத்தைச் சுற்றி நடக்கும் எந்தவொரு விஷயத்திற்கும் அவர் பதிலளிக்கவில்லை.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


