தனிப்பட்ட முறையில், அமெரிக்காவில் உள்ள வாரிசுரிமை வரி பற்றி தாம் தெரிவித்த கருத்துகளை மோடி ஆதரவு ஊடகங்கள் மடைமாற்றம் செய்து, காங்கிரசின் தேர்தல் அறிக்கை குறித்த மோடியின் பொய்களில் இருந்து மக்களை திசை திருப்ப முயற்சிப்பதாக, காங்கிரசின் அயலக பிரிவு தலைவர் சாம் பித்ரோடா விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவில் ஒருவர் இறந்து விட்டால் அவரது சொத்துகளில் 45 சதவிகிதம் மட்டுமே வாரிசுகளுக்கு போகும் எனவும் எஞ்சியது அரசு கஜானாவில் சேரும் என்ற சட்டம் உள்ளதை சாம் பித்ரோடா சுட்டிக்காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜக மற்றும் பிரதமர் மோடி தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் எக்ஸ் பக்கத்தில் சாம் பித்ரோடா தமது விளக்கத்தை பதிவு செய்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி பறிக்கப்படும் என பாஜக கூறுவது பொய் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
News Tamil 24 X 7