Sorting by

×

News Tamil 24 X 7

May 17, 2024

கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தியும் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை – அவிநாசி சாலை உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 16 – ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தியும் பால்குடம் எடுத்தும் அலகு குத்தி கோனியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக டவுன் ஹால், ஒப்பனைக்கார வீதி, நஞ்சப்பா சாலை வழியாக தண்டு மாரியம்மன் கோவில் வந்து அடைந்தனர்.
 

​News Tamil 24 X 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *