வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சர்வதேச மையத்தில் ஏற்படுத்தப்பட உள்ள 16 வசதிகளை விளக்கி தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன், கட்டுமானத்தின் போது தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் அவை பாதுகாக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, தொல்லியல் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஆர். மகாதேவன், P.D.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
News Tamil 24 X 7