Sorting by

×

டெல்லியைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவந்த `நியூஸ் க்ளிக்’ செய்தி நிறுவனத்தில், 2021-ம் ஆண்டு, அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது, நியூஸ் கிளிக் அலுவலகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வீடுகளிலிருந்து சுமார் 300 எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, நியூஸ் க்ளிக் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சீல் வைத்து, நியூஸ்க்ளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மீது, பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டமான `உபா’ (UAPA) சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டார்.

நியூஸ்க்ளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா

அவரின் வீடு, வங்கிக் கணக்குகள், சொத்துகள் முடக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,“பிரபிர் புர்கயஸ்தா மீது விசாரணை நீதிமன்றத்தால் காவலில் வைக்க முடிவு செய்யப்படுவதற்கு முன்பு, குற்றம்சாட்டப்பட்டவருக்கோ அல்லது அவரது வழக்கறிஞருக்கோ, அது தொடர்பான விண்ணப்பம், கைதுக்கான காரணம் வழங்கப்படவில்லை. எனவே, பிர்புர் புர்க்யஸ்தாவை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது சட்டவிரோதம். இந்த கைதும், காவலில் வைத்ததும் செல்லாது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

ஒடுக்கப்படும் ஊடக சுதந்திரம்… மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *