Sorting by

×

கர்நாடகா மாநிலத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், ஜெர்மன் தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பா.ஜ.க உதவி செய்துவருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி கைது வாரண்ட் பிறப்பக்கப்பட்டது. இதற்கிடையில், முன்னாள் முதல்வர் குமாரசாமி, தேவகவுடா உள்ளிட்ட தலைவர்கள் சரண்டராகும்படி எச்சரித்திருந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை விமானம் மூலம் ஜெர்மனியிலிருந்து பெங்களூரு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை எஸ்.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர்.

பிரஜ்வல் ரேவண்ணா (Prajwal Revanna)

அவரை கைதுசெய்ய போலீஸ் சூப்பிரண்டு உட்பட ஐந்து பெண் போலீஸ் அதிகாரிகளை நியமித்திருந்தது எஸ்.ஐ.டி. இந்தப் புகாரில் கைதுசெய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா, மருத்துவ பரிசோதனைக்காக இன்று பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தப்படுவார். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், பெண் போலீஸ் அதிகாரிகள் மட்டுமே அவருடன் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினராக தனது சிறப்புரிமைகளை மேற்கோள் காட்டி சில சலுகைகளை பிரிஜ்வல் ரேவண்ணா கேட்டதாகவும், ஆனால் காவல்துறை அவரது கோரிக்கையை மறுத்து, கூடுதல் வசதிகள் எதுவுமில்லாமல் வழக்கமான அறையில் அவரை அடைத்திருப்பதாகவும் விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்த சலுகையும் பெற மாட்டார்கள் என்பதைக் குறிக்கும் வகையில், ஆடம்பரமான கார்களைத் தவிர்த்து, அவர்களின் பழைய பொலிரோ காரில் மட்டுமே பிரஜ்வால் ரேவண்ணாவை அழைத்துச் செல்லவும் முடிவு செய்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரிஜ்வல் ரேவண்ணா

மேலும், பொது இடங்களில் அவர் அழைத்துச் செல்லப்படும்போது பிரஜ்வல் ரேவண்ணா முகத்தை மறைக்க அனுமதிக்கப்படமாட்டார். அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளும் வழங்கப்படாது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும், பெண்களையும், சிறுமிகளையும் ஆபாசமாக கிட்டத்தட்ட 3,000 வீடியோக்களை எடுத்து மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கிறோம் என ஒற்றுமையை தெரிவிக்கும் நோக்கம் கொண்டது என, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

குவிந்த பாலியல் புகார்கள்: ஜெர்மனி டு பெங்களூரு… நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா கைது!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *