ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மே 13-ல் தொடங்கி, பல கட்டங்களாக ஜூன் 1 வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஜார்கண்ட் எம்.பி-யும், பா.ஜ.க வேட்பாளருமான நிஷிகாந்த துபே, கோடா தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் நிஷிகாந்த துபே தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது, “பிரதமரைப் போலவே, நானும் இந்தத் பகுதியின் மக்கள்தொகை குறைந்து விட்டது என்று கருதுகிறேன்.
மோடி – நிஷிகாந்த துபே
1947-ம் ஆண்டு பீகாரின் ஒரு பகுதியாக இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில், பழங்குடியின மக்கள் தொகை 11 சதவிகிதம் குறைந்துள்ளது. கைது செய்யப்பட்ட அமைச்சர் ஆலம்கிர் ஆலம் வங்காளதேசத்தை சேர்ந்த முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கியதால் முஸ்லிம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. வங்காளதேசத்தவர்களின் காதல், நில ஜிஹாதில் இருந்து பழங்குடியினரை காப்பாற்ற, ஆர்.எஸ்.எஸ், கிறிஸ்தவ மிஷினரிகளுடன் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இதை நான் பொறுப்புடன் சொல்கிறேன். பழங்குடி சமூகத்தில் உள்ள மதமாற்றப் பிரச்னையை நாங்கள் பின்னர் கையாள்வோம். ஆனால் இப்போது பழங்குடியின கலாசாரத்தை காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. எமர்ஜென்சியின் போது, ஆர்.எஸ்.எஸ், சிபிஎம் (M) உடன் இணைந்து செயல்பட்டு, சர்வாதிகாரத்திலிருந்து மக்களை காப்பாற்ற உதவியது போல இப்போது ஆர்.எஸ்.எஸ்-வுடன் இணைந்து மிஷனரிகள் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
மோடி விதைக்கும் வெறுப்பு அரசியல்… பயத்தில் பாஜக?! | Elangovan Explains
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
