Sorting by

×

பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த வியாழனன்று உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். அதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவார் என்ற பேச்சுகள் அடிபட்டது.

மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி

அதற்கேற்றவாறு ஆளுநர் மாளிகையிலிருந்து நேற்று, அமைச்சரவை மாற்றத்துக்கான முதல்வரின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டதாக அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி உட்பட அமைச்சரவையிலிருந்து மூன்று பேர் வெளியேற்றம், நான்கு பேர் சேர்ப்பு மற்றும் 6 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் போன்றவை இடம்பெற்றிருந்தது.

மேலும், பதவியேற்பு விழா செப்டம்பர் 29-ம் தேதி பிற்பகல் 3:30 மணியளவில் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் ராஜ்பவனில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது.

உதயநிதி ஸ்டாலின்

நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், அவரின் மனைவி மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரின் மனைவி, மகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

செந்தில் பாலாஜி

மேலும், வைகோ, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைக்க, இரா.ராஜேந்திரனைத் தொடர்ந்து அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து கோவி. செழியன் மற்றும் நாசர் ஆகியோரும் பதவியேற்று கொண்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *