Sorting by

×

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். ஆனால், இதில் கடந்த முறையைப் போலவே வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல், கடந்த முறை தோல்வியடைந்த அமேதி தொகுதிக்குப் பதிலாக 2004 முதல் தன்னுடைய தாய் சோனியா காந்தி எம்.பி-யாக இருக்கும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

ராகுல் காந்தி

இதைப் பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்கள் பலரும், `கடந்த முறை அமேதியில் தோற்போம் எனத் தெரிந்ததால் வயநாட்டிலும் போட்டியிட்டார். இந்த முறை வயநாட்டில் தோற்போம் எனத் தெரிந்ததால் அமெதிக்கு செல்ல வழியில்லாமல் ரேபரேலியில் போட்டியிடுகிறார்’ என விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தன்னுடைய மகனைத் தங்களிடம் ஒப்படைப்பதாகவும், அவர் தங்களை ஏமாற்ற மாட்டார் என்றும் ரேபரேலி மக்களிடம் சோனியா காந்தி கூறியிருக்கிறார்.

ரேபரேலியில் மகன் ராகுல் காந்திக்காக இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட சோனியா காந்தி, “நான் என்னுடைய மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். உங்களில் ஒருவராக என்னை எப்படி நடத்தினீர்களோ, அவ்வாறே ராகுலையும் நடத்துங்கள். அவர் உங்களை ஏமாற்ற மாட்டார். அனைவரையும் மதிக்க வேண்டும். பலவீனமானவர்களைப் பாதுகாக்க வேண்டும். மக்களின் உரிமைகளுக்காக அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும். பயப்படாதீர்கள், நம் போராட்டத்தின் வேர்கள் ஆழமானவை… என இந்திரா காந்தியும் ரேபரேலி மக்களும் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்களைத்தான் ராகுலுக்கும், பிரியங்காவுக்கும் நான் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

பிரியங்கா – ராகுல் – சோனியா

ரேபரேலி என்னுடைய குடும்பம். அதேபோலவே அமேதியும் எனது வீடு. என் வாழ்க்கையின் மென்மையான நினைவுகள் மட்டும் இந்த இடத்துடன் தொடர்புடையது மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தின் வேர்களும் கடந்த 100 ஆண்டுகளாக இந்த மண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. நீண்ட நாள்களுக்குப் பிறகு உங்களிடத்தில் இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. என் இதயத்திலிருந்து சொல்கிறேன்… 20 ஆண்டுகளாக உங்களுக்கு எம்.பி-யாகப் பணிபுரியும் வாய்ப்பை எனக்குத் தந்தீர்கள். உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று கூறினார்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

கட்சி மாறி வந்தவர்களில் 106 பேருக்கு சீட் – பாஜக-வின் ‘பலே’ வியூகம் பலன் தருமா?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *