தேனி: கும்பக்கரை அருவிக்கு செல்ல அனுமதி!
கும்பக்கரை அருவி
கும்பக்கரை அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி; நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வனத்துறை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான்: சுரங்கத்தில் லிஃப்ட் சரிந்து விழுந்து விபத்து!
#WATCH | Jhunjhunu, Rajasthan: Rescue operations underway where 14 people are feared trapped after a lift fell in Kolihan mine.
(Latest visuals from the spot) https://t.co/v8OhqnoGYL pic.twitter.com/GvzidPkTBE
— ANI (@ANI) May 15, 2024
ராஜஸ்தா!ன் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின், கோலிஹான் சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், சுரங்கத்துக்குள் 14 பேர் சிக்கியிருந்தனர். சுமார் 577 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்த பணியாளர்களை இரவோடு இரவாக மீட்புப் பணிகள் மூலம் மீட்கப்பட்டிருக்கின்றனர். இதில் 3 பேர் ஆபத்தான நிலையில், ஜெய்பூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது குறிப்பிடதக்கது.
