Sorting by

×

திருநர் உரிமை பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) நிறைவேற்றப்பட்டது. அதில், முக்கிய அம்சமாக, திருநர் தங்களின் பாலினத்தை அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமை அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, மருத்துவக் குழுவினரே, திருநர்களின் பாலின அடையாளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய திருநர் கவுன்சிலின் (NCTP) உறுப்பினர்களான கல்கி சுப்பிரமணியம் மற்றும் ரிதுபர்ணா நியோக் ஆகியோர் புதன்கிழமை (மார்ச் 26) மாலை தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இந்த மசோதா “பிற்போக்கானது” என்று விமர்சித்துள்ள அவர்கள், “எங்களைக் கலந்தாலோசிக்காத ஒரு கவுன்சிலில் நீடிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

கல்கி சுப்பிரமணிய
கல்கி சுப்பிரமணிய

இது தொடர்பாக தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதியாகச் செயல்பட்ட கல்கி சுப்பிரமணியம், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமாருக்கு அனுப்பிய கடிதத்தில், “சமீபத்திய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட விதம், நான் இந்தப் பதவியில் நீடிக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

எங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் சட்டங்கள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்துவதே ஒரு சட்டப்பூர்வ பிரதிநிதியாக எனது முதன்மைப் பணி. என்னிடமோ அல்லது கவுன்சிலின் பிற சமூகப் பிரதிநிதிகளிடமோ எந்த முறையான ஆலோசனையும் நடத்தாமல் இந்த மசோதாவை முன்னெடுத்தது, இந்தக் கவுன்சில் உருவாக்கப்பட்ட நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ரிதுபர்ணா நியோக்
ரிதுபர்ணா நியோக்

இந்த விவகாரம் குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், “ஒரு முக்கியமான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில், அது குறித்து எங்களிடம் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது கூட்டங்கள் வாயிலாக எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. மாறாக, மாற்றுப் பாலினத்தவர்கள் மீதான எதிர்ப்பு நிலை பார்வையுடன் இந்த முடிவுகளை எடுத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

திருநங்கை பிரதிநிதி ரிதுபர்ணா நியோக் கூறுகையில், “எனது சமூகத்தின் குரலை அதிகாரிகளிடம் கொண்டு சேர்ப்பதே எனது பொறுப்பு என உணர்ந்தேன். எனது சமூகமே எனக்கு முக்கியம்,” எனத் தெரிவித்திருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *