தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது தவெக. இந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தி பேசியிருந்தனர்.

ஆதவ் அர்ஜூன் பேசுகையில், ‘பிகில் படத்தில் ‘நம்ம ஆளுங்களை எல்லாம் அடிச்சிட்டாங்க’ என ட்ரைவர் சொல்ல ‘உடனே அந்த இடத்துக்கு வண்டியை விடு’னு தலைவர் சொல்வார். ‘தொக்கா மாட்னானுக’ என தலைவர் வசனம் பேசிவிட்டு கார் கதவை திறக்கையிலேயே 5 பேர் பறப்பார்கள்.
துறைமுகம் தொகுதியில் அமைதியாக பிரசாரம் செய்த எங்கள் நிர்வாகிகள் மீது கை வைத்ததால்தான் தலைவர் முதலில் வட சென்னையில் களமிறங்குகிறார்.
சென்னை எங்களின் கோட்டை என்கிறார்களே அதனால்தான் முதலில் சென்னைக்குள் இறங்குகிறோம். இனி சென்னைன்னா தவெகதான்.
வடசென்னையில் சேகர் பாபு என்றால் இங்கே அவரின் காட்பாதர் வி.எஸ்.பாபு இருக்கிறார்.

வடசென்னை மக்கள் என்றாலே ஒரு தவறான கண்ணோட்டத்தை திமுக உருவாக்கிவிட்டது. இங்கே இருக்கும் அத்தனை மக்களும் உழைப்பாளிகள். இங்கே எந்த கட்டமைப்பு வசதியும் இல்லை.
திமுகவுக்கு எதிராக நாம் பிரசாரம் செய்யவே வேண்டாம். திமுக பற்றி வைகோ பேசியவற்றை எடுத்து போட்டாலே போதும்.
தீயசக்தி திமுகவை வீழ்த்த கேப்டன் உருவாக்கிய கட்சி தேமுதிக. தண்ணி போட்றவன் எல்லாம் கேப்டன் இல்லனு திமுக பேசுனாங்க. ஸ்டாலின் அதை கேட்டு சிரிச்சிட்டு இருந்தாரு. கேப்டனின் ஆன்மா ஒரு போதும் இவர்களை மதிக்காது.
எந்த இடத்துல அதிக வறுமை இருக்கிறதோ எந்த இடத்தில் மக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் போட்டியிட வேண்டுமென தலைவர் சொல்வார்.
தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நிற்க வேண்டுமென தீர்மானம் போடுகிறேன். கொளத்தூர், ஆர்.கே.நகர் என வடசென்னையில் ஒரு தொகுதியில் நிற்க வேண்டும் என்பதுதான் தலைவரின் விருப்பமாக இருக்கும்’ என்றார்.

ஆனந்த் பேசுகையில், ‘ஆதவ் முன்வைத்த தீர்மானத்தை நாங்கள் எல்லாரும் மனதார ஏற்றுக்கொள்கிறோம். உங்களுடைய விருப்பத்தை தளபதியிடம் சொல்வோம்.’ என்றார்.
–
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
