Sorting by

×

TVK Vijay: “கிளி ஜோசியம்போல வதந்திகளைப் பரப்புகிறார்கள்” – சி.டி.ஆர்.நிர்மல் குமார்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 போ்பரிதாபமாக பலியானார்கள். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரித்து வருகின்றது.

கரூரில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட நிலையில், தற்போது டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.

தவெக விஜய்
தவெக விஜய்

அதன் அடிப்படையில், த.வெ.க நிர்வாகிகளைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம் கடந்த 12-ம் தேதி 6 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக காலை 11 மணிக்கு விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் சுமார் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். மேலும், தமிழக காவல்துறை அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், த.வெ.க இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,“இன்றுடன் எங்கள் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்மன் முடிந்தது. எங்களின் நிகழ்ச்சி நிரல்களையும், நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அவர்களுக்கு என்னென்ன தகவல்கள் தேவையோ அவை அனைத்தையும் கொடுத்திருக்கிறோம்.

இன்றுடன் எங்கள் தலைவருக்கு விசாரணை முடிந்தது. ஆனால் காலையிலிருந்து திமுக ஆதரவு ஊடகங்கள் விஜய் கைது என்றும், அவர் மீது சார்ஜ் ஷீட் போடப்பட்டிருக்கிறது என்றும் கிளி ஜோசியம் சொல்வதைப்போல வதந்திகளைப் பரப்புகிறார்கள். அவர்கள் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை.

தவெக விஜய்
தவெக விஜய்

அமித் ஷா தமிழ்நாடு வந்தபோது, அவர் முன்னாலேயே பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், `கரூர் மரணத்துக்கு செந்தில் பாலாஜிதான் காரணம்’ என வெளிப்படையாகப் பேசினார். ஆனால் அது குறித்து எந்த ஊடகமும் விவாதம் நடத்தவில்லை.

செந்தில் பாலாஜிக்கு ஏதேனும் சம்மன் அனுப்பப்பட்டதா இல்லையா என்பது குறித்து பேசியிருக்க வேண்டும். ஆனால் தவறான தகவல்களைப் பதிவு செய்கிறார்கள். சிபிஐ விசாரணை தொடர்பான தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *