Sorting by

×

தொடர்ந்து விவாதக் களத்தில் இருந்த தமிழ்நாடு அமைச்சரவையின் மாற்றம் இறுதியாக நடந்துவிட்டது. எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களைக் கடந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டு, பதவியேற்றிருக்கிறார். ஜாமீனில் வெளிவந்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து சினிமா உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

அதனடிப்படையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டிருக்கும் வீடியோவில், `இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் மானமிகு, மாண்புமிகு, அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதி காப்பதில் சமரசமில்லா போராளியாக திகழும் அவருக்கு வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெரியாரின் தொண்டனாக பெருமைகொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

துணை முதல்வராகக் கலந்துகொண்ட உதயநிதி… மீண்டும் அதே துறையில் செந்தில் பாலாஜி; யாருக்கு என்ன இலாகா?!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *