Sorting by

×

கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நமது திராவிட மாடல் ஆட்சியில் பத்மநாபபுரம் தொகுதிக்கு அருவிக்கரையில் இருந்து மாத்தூர் தொட்டிப்பாலம் வரை செல்ல உயர்மட்ட இணைப்புப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

தக்கலையில் இருந்து பேச்சிப்பாறை செல்லும் சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. வேர்க்கிளம்பி முதல் அழகியமண்டபம் வரையிலான சாலை இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது.

​இந்தத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடும் செல்லசுவாமிக்கு ‘அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்’ சின்னத்திலும், கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் பிரவீன் ஆகியோருக்கு ‘கை’ சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.

​கன்னியாகுமரி தொகுதியில் மகேஷ் அவர்களுக்கும், நாகர்கோவில் தொகுதியில் ஆஸ்டின் அவர்களுக்கும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஆஸ்டின் அவர்களை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

கல்லூரி காலத்திலிருந்தே பொதுவாழ்வில் ஈடுபட்டு, தன் வாழ்வை மக்கள் சேவைக்காக அர்ப்பணித்தவர் அவர். எளிமையானவர், உழைப்பாளி, அனைத்துத் தரப்பு மக்களிடமும் அன்போடு பழகக்கூடியவர். தற்போது தி.மு.க துணை அமைப்புச் செயலாளராக தலைவருக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்த முறை நாகர்கோவிலை நாம் விட்டுவிடக்கூடாது.

​அதேபோல், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மகேஷ் அவர்களும் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர். மாவட்டச் செயலாளராக, சிறந்த மேயராக மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர். இவர்கள் இருவரையும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் இவர்களை வெற்றிபெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையப் போவது உறுதி. அதற்கு வலுசேர்க்கும் விதமாக இங்கிருந்து வெற்றியைத் தேடித்தாருங்கள்.

பத்மநாபபுரத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்த உதயநிதி
பத்மநாபபுரத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்த உதயநிதி

கடந்த ஐந்து ஆண்டுகளில் நமது திராவிட மாடல் அரசு செய்துள்ள திட்டங்களை மட்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

​நாகர்கோவில் மாநகராட்சிக்கு 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

​மாநகராட்சிக்குப் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, அதற்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ​கோணம் பகுதியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வடசேரியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ​3 கோடி ரூபாயில் அறிவியல் பூங்கா, தொல்லவலையில் ஆரம்ப சுகாதார நிலையம், கோட்டாரில் போக்குவரத்து காவல் நிலையக் கட்டடம் போன்றவை கட்டப்பட்டுள்ளன.

​பொன்னப்பா நாடார் அவர்களுக்குத் திருவுருவச் சிலை அமைத்துக் கொடுத்து பெருமை சேர்த்துள்ளோம். ​கணபதிபுரம் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள் மற்றும் புதிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனை திட்டங்களைச் செய்துள்ள அந்த உரிமையோடுதான் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கேட்டு உங்களிடம் வந்திருக்கிறேன்.

நாகர்கோவிலில் உதயநிதி பிரசாரம்
நாகர்கோவிலில் உதயநிதி பிரசாரம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்கு ஏதேனும் நிதி ஒதுக்கியதா? நாம் கேட்கும் திட்டங்களைக் கொடுத்தார்களா? எதுவுமே இல்லை. நமக்கு வரவேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளார்கள். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என்கிறார்கள்.

மும்மொழிக் கொள்கை என்பது இந்தித் திணிப்பு. அதனால்தான், ‘எந்தக் காலத்திலும் மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன்’ என நம் முதல்வர் உறுதிபடக் கூறிவிட்டார். ​இந்தத் தேர்தல் ‘டெல்லி அணி’க்கும் ‘தமிழ்நாடு அணி’க்கும் இடையிலானப் போட்டி. இதில் டெல்லி அணியை தமிழ்நாடு அணியாக நாம் வீழ்த்திக் காட்ட வேண்டும்.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை நாம் புறக்கணிக்க வேண்டும். தேர்தல் அறிவித்தவுடன் மோடி அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாரம் ஒருமுறை இங்கு வருகிறார். ஆனால் நமக்கான நிதியோ, திட்டங்களோ வருகிறதா? இல்லை. தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளை 39-லிருந்து 31-ஆகக் குறைக்கப் பார்க்கிறார்கள். இது தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் செயல்.

தக்கலையில் உதயநிதி பிரசாரம்
தக்கலையில் உதயநிதி பிரசாரம்

இதை எதிர்த்து இந்தியாவிலேயே வேறு எந்தத் தலைவரும் சொல்லாதத் துணிச்சலுடன், ‘மறுவரையறை கொண்டு வந்தால் எதிர்ப்போம்’ என நம் தலைவர் குரல் கொடுத்துள்ளார். பாசிசத்தை எதிர்த்தும், சங்கி கூட்டத்தை எதிர்த்தும், மாநில உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் நம் முதல்வர் மட்டும்தான்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்களுக்காக 507 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. டீசல், மண்ணெண்ணெய் அளவு உயர்த்தப்பட்டுள்ளன. மீன் இறங்கு தளங்கள், விவேகானந்தர் பாறை முனையத்தில் கட்டமைப்பு வசதிகள் எனப் பல பணிகள் செய்யப்பட்டுள்ளன.

​தேர்தல் அறிக்கையிலும் மீனவர்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளைத் தந்துள்ளோம்.

​மீன்பிடி தடைக்கால நிவாரணம் 8,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்படும். ​மீன்பிடி குறைவுகால சிறப்பு நிவாரணம் 6,000 ரூபாயிலிருந்து 9,000 ரூபாயாக உயர்த்தப்படும். தமிழ்நாட்டு மீனவர்கள் இன்று மற்ற நாட்டுப் படைகளால் தாக்கப்படும் நிலையில், அவர்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

மோடியைக் கண்டு உலகமே அஞ்சுகிறது என்று சங்கிகள் சொல்கிறார்கள், ஆனால் அவரால் நம் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை. மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும். சட்டமன்றத் தேர்தல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் இருக்கும் எட்டு நாள்கள் நீங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று நமது அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

Udhayanidhi
Udhayanidhi

சங்கி கூட்டத்தையும், அடிமை கூட்டத்தையும் மீண்டும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விட்டால் நாட்டைப் பின்னோக்கி கொண்டு சென்றுவிடுவார்கள் என்பதை மக்களிடம் விளக்குங்கள். அந்தப் பிரசாரத்தைச் சரியாகச் செய்தால், நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தேடித்தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *